குழந்தைகளிடம் காணப்படும் கொரோனா தொற்று அறிகுறிகள் என்ன? பாதிப்புகள் என்ன?

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து 100 குழந்தைகளுக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளிடம் காணப்படும் கொரோனா தொற்று அறிகுறிகள் என்ன? பாதிப்புகள் என்ன?
(கோப்புப் படம்)
  • Share this:
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து 100 குழந்தைகளுக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது வரை தமிழகத்தில்  12 வயதுக்கு உட்பட்ட 2619 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை எந்த குழந்தையின் உயிருக்கும் பாதிப்பில்லை என்பது ஆறுதலான செய்தி.

குழந்தைகளில் கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் அதற்கான அறிகுறிகள் பெரியவர்களில் ஏற்படுவதை விட சில  மாற்றங்கள் உள்ளன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


"பெரியவர்களில் காணப்படும் மூச்சு திண்றல் குழந்தைகளில் ஏற்படுவதில்லை. காய்ச்சல், சளி ஆகியவைவே முக்கிய அறிகுறிகளாக உள்ளன.மேலும் தலைவலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்" என சென்னையில் பணிபுரியும் குழந்தை நல மருத்துவர் கார்த்திகேயன் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் குழந்தைகளை தாக்கும்போது அவை லேசான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. உலகம் முழுவதும் பெரும்பாலான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதில்லை.ஆனால் கொரோனா நோய் தாக்கத்துக்கு பிறகு உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியில் மாற்றம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Also read... சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் ஒரு வாரத்தில் 30% வரை உயர்ந்த பாதிப்பு: கொரோனா அப்டேட்..

எனவே, இருதயத்தை பாதிக்கும் கவாசகி நோய் போன்ற தாக்கம் உடலில் ஏற்படுவதாக மற்ற நாடுகளில் அறியப்படுகிறது. தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் அதற்கான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading