கர்நாடகாவில் கனமழையால் காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறப்பு!

கூடுதலாக திறந்துவிடப்படும் நீர் இன்று இரவிற்குள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: August 9, 2019, 9:10 AM IST
கர்நாடகாவில் கனமழையால் காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறப்பு!
காவிரி நீர்
Web Desk | news18
Updated: August 9, 2019, 9:10 AM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1 லட்சத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கர்நாடகாவிலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 84 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 81 அடியைத் தாண்டியுள்ளது.

அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 60,000 கன அடியாக இருந்த நிலையில், அது படிப்படியாக உயர்ந்துள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி 90,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


இதேபோல, கபினியின் தடுப்பணையான தாரகாவிலிருந்து 12,000 கனஅடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 421 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கூடுதலாக திறந்துவிடப்படும் நீர் இன்று இரவிற்குள் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,100 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1000 கன அடியாகவும் உள்ளது.

இதனிடையே, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம், அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள மழை நிலவரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

Loading...

கடந்த 31-ம் தேதிக்குப் பிறகு, மழை அளவு அதிகரித்த போதிலும், சில பகுதிகளில் சராசரியைவிட குறைவான அளவே மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறித்தும் உறுப்பினர்கள் விவாதித்தனர். கபினி அணையிலிருந்து நேற்று காலை முதல் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து பதிவுசெய்து கொண்ட அதிகாரிகள், மீண்டும் டெல்லியில் வரும் 13-ம் தேதி ஆலோசனை நடத்த முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தின் கதை

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...