48 நாட்களில் அத்திவரதரை எவ்வளவு பேர் தரிசித்துள்ளனர்? உண்டியல் வசூல் எவ்வளவு? மாவட்ட ஆட்சியர் தகவல்

”சேகரிக்கப்பட்ட குப்பையை மறு சுழற்ச்சி செய்யப்படும். பக்தர்கள் விட்டு சென்ற காலனிகள் ஆதரவற்ற இல்லங்களுக்கும் மீதமிருப்பவை ஏலம் விடப்படும்”

news18
Updated: August 17, 2019, 12:46 PM IST
48 நாட்களில் அத்திவரதரை எவ்வளவு பேர் தரிசித்துள்ளனர்? உண்டியல் வசூல் எவ்வளவு? மாவட்ட ஆட்சியர் தகவல்
அத்திவரதர்
news18
Updated: August 17, 2019, 12:46 PM IST
அத்திவரதர் வைபவத்திற்காக ஏற்படுத்தபட்ட ஓரிக்கை தற்காலிக பேருந்து நிலையத்தை நிரந்தரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.

அத்திவரதர் வைபவம் இன்றோடு நிறைவு பெருகிறது மூன்று கால பூஜைக்கு பிறகு அத்திவரதர் இன்று இரவு அனந்தசரஸ் திருக்குளத்தில் சயனம் கொள்கிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர் வைபவத்திற்காக ஓரிக்கை, ஒலிமுகபது பேட்டை, பச்சையப்பன் கல்லூரி என 5 இடங்களில் ஏற்படுத்தபட்ட தற்காலிக பேருந்து நிலையங்களில் ஓரிக்கை தற்காலிக பேருந்து நிலையம் இனி நிரந்தரமாக செயல்படுத்துவது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றார்


தொடர்ந்து பேசிய பொன்னையா வைபவத்தின் இறுதிநாளான இன்று பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றார். 48 நாட்களில் 1 கோடியே 7 ஆயிரத்து 500 பேர் அத்திவரதரை தரிசனம் செய்திருப்பதாகவும் அவர் கூறினார். இதுவரை எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மட்டும் ரூ.7 கோடி முழுமையாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வைபவத்திற்காக முதல்கட்டமாக அரசு ரூ.29 கோடியை ஒதுக்கிய நிலையில் உள்ளாட்சி துறை, சுகாதாரத்துறை என மற்ற துறைகளுக்கு கூடுதலாக தொரயமாக ரூ.15 கோடி வரை செலவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒரு நாளைக்கு சராசரியாக 25 டன் குப்பை சேகரிக்கபட்டிருப்பதாக கூறிய பொன்னையா சேகரிக்கப்பட்ட குப்பையை மறுசுழற்ச்சி செய்யப்படும் எனவும் பக்தர்கள் விட்டு சென்ற காலனிகள் ஆதரவற்ற இல்லங்களுக்கும் மீதமிருப்பவை ஏலம் விடப்படும் எனவும் அவர் கூறினார்.

Loading...

இறுதிநாளான இன்று தேவராஜ சுவாமி உற்சவர் அத்திவரதரை தரிப்பார் அதன் பிறகு சாம்ரதாய படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் சயனம் கொள்கிறார்

வைபவம் சிறப்பாக நிறைவு பெற மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் காவல்துறைக்கும் பொன்னையா நன்றி தெரிவித்துகொண்டார்.

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...