நீர் நிலைகளை மக்கள் நீதி மய்யம் மீட்டெடுக்கும் - கமல் ஹாசன் பேச்சு

கமல்ஹாசன்

ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை மீட்டெடுக்க வேண்டிய கடமை இருப்பதாகவும் அதை மக்கள் நீதி மய்யம் செய்யும் என்றும் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
இரண்டாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்கி உள்ள மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ஈசிஆர் பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஈசிஆர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; கான்க்ரீட் மழைநீர் வடிகால் அமைப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் என அவர்கள் தெரிவித்து வரும் நிலையில், அந்தப் பகுதி மக்களை கமலஹாசன் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து பேசுகையில், ஈசிஆர் பகுதியில் மழைநீர் வடிகாலைப் பார்க்கும்போது ஜெர்மன் தொழில்நுட்பம் தெரியவில்லை; அரசின் finance மட்டுமே தெரிகிறது என்ற அவர், மக்கள் நீதி மய்யம் சுற்றுச்சூழலையும் இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. உப்பை சுவாசித்தவரிடம் நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும். எங்களின் சட்டப் பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் என்றார்.

Also read: யூட்யூப்பைப் பார்த்து கள்ள நோட்டு தயாரிப்பு: சென்னை கடைகளில் புழக்கத்தில் விட்டவர் கைது...

மேலும் கூறுகையில், குடிமராமத்து திட்டத்தை பெரிய சாதனையாக முதல்வர் பேசி வருகிறார். ஆனால் ராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை மீட்டெடுக்க வேண்டிய கடமை  இருக்கிறது. ஏரிகள் இருந்த இடமெல்லாம் குடியிருப்புகளாக மாறி வருகின்றன. கண்ணை மூடித் திறப்பதற்குள் ஏரிகள் காணாமல் போய்விடுகின்றன என்று கூறினார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: