• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முன்னெப்போதையும்விட இப்போதுதான் பெரியார் அதிகம் தேவைப்படுகிறார்- கி.வீரமணி

முன்னெப்போதையும்விட இப்போதுதான் பெரியார் அதிகம் தேவைப்படுகிறார்- கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

சமஸ்கிருதத்திற்கு 300 கோடி செலவு செய்யும் அரசு, தமிழுக்கு வெறும் மூன்று கோடி மட்டுமே செலவு செய்கிறது எனில் யார் இங்கு நன்றி மறந்தவர்கள்?

  • Last Updated :
  • Share this:
    முன்னெப்போதையும்விட இப்போதுதான் பெரியார் நம் நாட்டிற்கு அதிகம் தேவைப்படுவதாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

    தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளை ஒட்டி திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திராவிடர் கழகத் தொண்டர்கள் உடன் பேரணியாகச் சென்று எழும்பூரில் உள்ள மணியம்மை சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செய்த பின்பு, அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கி.வீரமணி, ‘‘பெரியாரின் கொள்கைகள் முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் தேவைப்படுகிறது. உலகம் முழுக்க பெரியாரின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒருவகையில் நன்றி தெரிவிக்க வேண்டும், காரணம் தேர்தலுக்குப் பின்பு பிரிந்திருந்த பல்வேறு மாநிலங்களை, மொழி பண்பாட்டில் அவர் கைவைத்ததன் மூலம், அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவிலும் இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் வலுவாக ஒலிக்கின்றன’’.

    ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த வீரமணி, ‘‘ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மிக மோசமான திட்டம் இது. இந்த விவகாரத்தில் அண்ணா எம்ஜிஆர், ஜெயலலிதா வழியை மறந்து, சமூக நீதிக்கு மாறாக அதிமுக வேறு பாதையில் செல்கிறது. அதிகப்படியான தேர்வுகளால் மாணவர்களை இது மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும்’’.

    தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்ற பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதிலளித்த அவர், ‘‘சமஸ்கிருதத்திற்கு 300 கோடி செலவு செய்யும் அரசு, தமிழுக்கு வெறும் மூன்று கோடி மட்டுமே செலவு செய்கிறது எனில் யார் இங்கு நன்றி மறந்தவர்கள்?’’ என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ilavarasan M
    First published: