Home /News /tamil-nadu /

திமுக கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி - முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்

திமுக கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி - முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்

திமுக கூட்டணி கொள்கை கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

திமுக கூட்டணி கொள்கை கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

திமுக ஆட்சிக்குத் தேவையான, ஆரோக்கியமான ஆலோசனைகளை சிபிஎம் கட்சியினுடைய தலைவர்கள் எங்களுக்கு அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

    திமுக - பாஜக உறவு, கூட்டணி ஆகியவை குறித்து முனுமுனுப்புகள் எழுந்துள்ள நிலையில், தற்போதைய கூட்டணி கொள்கை கூட்டணி, அது தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கேரளா மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் ஊடகம் நடத்திய கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். பின்னர், கருத்தரங்கில் பங்கேற்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில், சிபிஎம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த நட்பு ஆட்சியிலும் கட்சியிலும் எப்படி இருக்கிறது என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின், "எங்களுடைய இரு கட்சிகளுக்கும் இடையில் இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல. அது ஒரு கொள்கை கூட்டணி, இலட்சியக் கூட்டணி. எனவே நாங்கள் இணக்கமாவே இருக்கிறோம்.

    திமுக ஆட்சிக்குத் தேவையான, ஆரோக்கியமான ஆலோசனைகளை சிபிஎம்-யை பொறுத்தவரையும் அக்கட்சியினுடைய தலைவர்கள் எங்களுக்கு அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறார்கள். தொலைபேசி மூலமாக எங்களுக்கு சொல்கிறார்கள். ஏன் நேரிலும் எங்களை பார்த்து இப்பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறது, இப்படி செய்ய வேண்டும் என்று கருத்துகளை சொல்கிறார்கள்.

    அதுமட்டுமல்லாமல், நானும் சில விஷயங்களை அவர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு செய்து கொண்டு இருக்கிறோம். அதையும் தாண்டி பல கருத்துகளை சிபிஎம் அதிகாரபூர்வமான பத்திரிகையான “தீக்கதிர்” பத்திரிகையில், அவ்வப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்கள். அதையெல்லாம் உடனுக்குடன் சரி செய்கிறோம். ஆக எங்களுடைய கொள்கை கூட்டணி, ஆரோக்கியமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இது தொடரும்." இவ்வாறு பதில் அளித்தார்.

    இதையும் படிங்க: 299 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை.. இங்குள்ளவர்களுக்கு தகுதியில்லையா? - என்எல்சி நிறுவனத்துக்கு வைகோ கண்டனம்

    தமிழ்நாட்டில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகை தந்தார். இந்த நிகழ்விற்கு வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பான வரவேற்பு கொடுத்து, ஒரே மேடையில் மகிழ்ந்து பேசி ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டனர். இதை தொடர்ந்து திமுக பாஜக கூட்டணி ஏற்படுமா என முனுமுனுப்புக்கள் எழத் தொடங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கொள்கை கூட்டணி, அது தொடரும் என பதில் அளித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: CM MK Stalin, DMK Alliance

    அடுத்த செய்தி