• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கள்ள லாட்டரி விற்பனை தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்குகிறதா?

கள்ள லாட்டரி விற்பனை தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்குகிறதா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கள்ளத்தனமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

    தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு 2003-ம் ஆண்டு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி கள்ளத்தனமாக லாட்டரியை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை ஒட்டியுள்ள பிற மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கேரளாவில் லாட்டரி விற்பனை சட்டப்பூர்வமானதாக இருக்கிறது. கேரளாவுக்கு செல்லும் லாரி ஓட்டுநர்கள் அல்லது பிற வேலைகளுக்காக செல்பவர்கள் அங்கு விற்பனையாகும் லாட்டரிகளை வாங்கி வருவார்கள்.

    Also Read: தண்ணீர் குடிக்கும் போது பல் செட் விழுங்கிய பெண்.. உயிரிழந்த சோகம்..

    இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் கள்ளத்தனமாக அதிகளவில் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சென்னை மற்றும் திருச்சியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை கள்ளத்தனமாக விற்பனை செய்த நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து அச்சிறுபாக்கம் போலீஸார் அப்பகுதிக்கு விரைந்தனர்.

    Also Read:  உயிருக்கு போராடிய மூதாட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற பெண் காவல் ஆய்வாளர்- குவியும் பாராட்டுகள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அங்கு மேற்கொண்ட விசாரணையில் அதேப்பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம், ராமதாஸ்,   மன்னேரி,சோத்துப்பாக்கம் வெங்கடேசன், ஆகிய  நால்வரை, நேற்று முன்தினம் இரவு, கைது செய்து, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.

    திருச்சி மாநகரப்பகுதியில் வெளிமாநில லாட்டரிகள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மூவரும் திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: