ஆதரவற்றோர் காப்பகத்தில் 4 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த நிர்வாகி கைது!

1996-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த காப்பகத்தில் தங்கியுள்ள 25 சிறுமிகள் அருகிலுள்ள சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

Yuvaraj V | news18
Updated: August 13, 2019, 8:54 PM IST
ஆதரவற்றோர் காப்பகத்தில் 4 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த நிர்வாகி கைது!
மாதிரிப் படம்
Yuvaraj V | news18
Updated: August 13, 2019, 8:54 PM IST
மதுரையில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த காப்பக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் மாஷா டிரஸ்ட் சார்பில் அன்னை நியோமி இல்லம் என்ற பெயரில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம் உள்ளது. 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த காப்பகத்தில் தங்கியுள்ள 25 சிறுமிகள் அருகிலுள்ள சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், காப்பகத்தின் அறங்காவலரான கருமாத்தூரை சேர்ந்த ஆதிசிவன், அங்குள்ள 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து சைல்டு லைன் உறுப்பினர் காவல் சண்முகம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆதிசிவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், காப்பகத்தில் இருந்த சிறுமிகள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள வேறு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Also see:

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...