உடல் உறுப்பு மாற்று சட்ட திருத்தத்துக்கு தமிழகம் ஒப்புதல்; சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு - நிபுணர்கள் எச்சிரிக்கை!

மாதிரி படம்

மத்திய அரசின் உடல் உறுப்பு மாற்று சட்ட திருத்தத்துக்கு தமிழகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது . இந்த சட்டத் திருத்தத்தால் மாநில அரசின் உரிமையும், அதிகாரமும் பறி போவதுடன், பல சிக்கல்களும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 • Share this:
  மத்திய அரசின் உடல் உறுப்பு மாற்று சட்ட திருத்தத்துக்கு தமிழகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது . இந்த சட்டத் திருத்தத்தால் மாநில அரசின் உரிமையும், அதிகாரமும் பறி போவதுடன், பல சிக்கல்களும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

  தமிழகத்தில் உடல் உறுப்பு தான திட்டம் 2008ஆம் ஆண்டு முதல், சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மருத்துவர்கள், அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், இன்று இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறது. 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உடலுறுப்பு தான சட்டத்தின் கீழ் தமிழகத்தில் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. ஆனால் 2014ஆம் ஆண்டு இந்த சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.

  அதன்படி, மாநிலங்களில் நடைபெறும் உடல் உறுப்பு தான திட்டத்தை தேசிய அளவில் இயங்கும் NOTTO என்ற அமைப்பு ஒருங்கிணைந்து வழி நடத்தும் என்றும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யும் மருத்துவமனைகள் தங்களுடைய விவரங்களையும் அந்த அமைப்பின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

  இதுபோன்ற தேசிய அளவிலான அமைப்பின் கீழ் செயல்பட்டால் எந்த மாநிலத்தில் யாருக்கு எந்த உறுப்பு போய்ச் சேர வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களில், மாநில அரசு முடிவு செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்று தமிழ்நாடு அரசின் உடல் உறுப்பு தான அமைப்பின் நிறுவன உறுப்பினர் மற்றும் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அமலோற்பவநாதன் கூறுகிறார்.

  தற்போது மாநிலங்களுக்கு இடையேயான உறுப்பு தான பரிமாற்றத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்களை பேசி முடிவு செய்து கொள்கின்றன. இதுபோன்ற முடிவுகளை இனிவரும் காலத்தில் எடுக்க முடியாது என்று அவர் கூறுகிறார். மேலும் இந்தச் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதை, ஏன் ரகசியமாக வைத்திருந்தது என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

  புதிய சட்ட திருத்தத்தின்படி தேசிய அளவிலான அமைப்பின் கீழ் இயங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் உறுப்புகள் வீணாக வாய்ப்பு இருப்பதாகவும் மோகன் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலரும் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நிபுணருமான மருத்துவர் சுனில் ஷ்ராப் கூறுகிறார். இருதயம் மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகள் தானம் அளிப்பவர் உடலில் இருந்து நீக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் மாற்றிப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். இந்த குறுகிய காலத்துக்குள் தேசிய அளவிலான அமைப்போடு தொடர்புகொண்டு முடிவெடுத்து கூறும் வரை காத்திருந்தால் பல உறுப்புகள் வீணாக வாய்ப்புள்ளதாக மருத்துவர் சுனில் ஷ்ராப் கூறுகிறார்.

  2014 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்ட திருத்தத்தை ஐந்து ஆண்டுகளாக ஒப்புக்கொள்ளாமல் இருந்த தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதி ஏற்றுக் கொண்டுள்ளது
  Published by:Esakki Raja
  First published: