Home /News /tamil-nadu /

ஆர்டர்லி முறை ஒழிப்பு நடவடிக்கை: தமிழக அரசு, டிஜிபிக்கு நீதிமன்றம் பாராட்டு

ஆர்டர்லி முறை ஒழிப்பு நடவடிக்கை: தமிழக அரசு, டிஜிபிக்கு நீதிமன்றம் பாராட்டு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளதாகவும்,  மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்பப் பெறப்படுவார்கள் எனவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்று சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

    காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை ஆகியவை தொடர்பான வழக்கில், ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளதாகவும்,  மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்பப் பெறப்படுவார்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

    காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ பி எஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அரசுத்தரப்பு தெரிவித்தது.
    ஆர்டர்லி முறையை ஒழிக்க டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு வரவேற்பும், பாராட்டும் தெரிவித்த நீதிபதி,  ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளதாக திருப்தி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்து செயல்படலாம்.. சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

    மேலும், காவலர்கள் ஆர்டர்லிகளாக நியமிக்கப்படுவதால், மக்களின் வரிப்பணம் வீணாவதாக கவலை தெரிவித்த நீதிபதி, பயிற்சி பெற்ற காவலர்களை ஆர்டர்லிகளாக பயன்படுத்தக் கூடாது என்றார்.
    உயர் அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை நியமிக்கலாம் என்றும் நீதிபதி யோசனை வழங்கினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai High court, Police, TN Govt

    அடுத்த செய்தி