கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று, திரும்பச் செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அதில், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை திரும்பச் செலுத்தவில்லை என தெரிவித்துள்ளது.
பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல்படியே பிற பணியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கடன் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்காததால், ஆசிரியர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை என்றும் இதனால் இழப்பு ஏற்படுவதாக பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.
ஆசிரியர்கள் கடன்பெற்ற விவரங்களை ஊதியச் சான்றிதழில் மறைத்ததுடன், இதர வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவதற்கும். தலைமை ஆசிரியர்கள் உதவி செய்வதாகத் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியாளர், சட்டப்படி கடனை செலுத்தாமல் தவறு செய்தவர்கள் மீது ஒழுங்கு விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்கள் பெற்ற கடன் தொகையை உரிய முறையில் திரும்பச் செலுத்தவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோன்
அதேபோல, ஆசிரியர்கள் கடன் பெற்ற விவரத்தை மறைத்து, கடன் பெற்ற தொகையினை பிடித்தம் செய்யாமல். முழு ஊதியம் பெற வழிசெய்த தலைமை ஆசிரியர்கள் மீதுஒழுங்கு விதிகளின்கீழ்
நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதன் உத்தரவில் தெரிவித்துள்ளது.
Must Read : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்... ஆக்சிஜன், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து பேசப்படும் என தகவல்
வரும் காலங்களில் கடன்பெற்ற ஆசிரியர்களின் ஊதியத்தில் உரிய தொகையைப் பிடித்தம்செய்து அதை
வங்கிக் கணக்கில் செலுத்த தலைமை ஆசிரியர்கள்
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.