மதுரை: பல்வேறு குற்றச்சாட்டினால் முன்னாள் நகர் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..

மதுரம்

மதுரை மாநகராட்சி முன்னாள் நகர் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை உத்திரவு. 

  • Share this:
மதுரை மாநகராட்சியில் நகர் பொறியாளறாக பணிபுரிந்தவர் மதுரம். தற்போது ஈரோடு மாநகராட்சியில் நகர் பொறியாளராக பணி செய்து வருகிறார்.இவர் மதுரை மாநகராட்சியில் உதவி நிர்வாக பொறியாளராக பணி செய்த காலத்தில் ரோபோ வாகனம் வாங்கியது, அலுவல் நிமித்தமாக கோவா மாநிலத்திற்கு விமான டிக்கெட் எடுத்தது, மதுரை மாநகராட்சி ஊர்திகளுக்கு உரிய காலத்திற்குள் தகுதி சான்றிதழ் பெறப்படாமல் வாகன பதிவை வேண்டுமென்றே கால தாமதம் செய்தது, வாகன தரக் கட்டுப்பாடு பதிவேடு சரியான முறையில் பராமரிக்க படாதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமை செயலாளர் மற்றும் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை இயக்குனருக்கு கடந்த ஏப்ரல் 23 அன்று புகார் மனு அளித்துள்ளார்.

அதில்,மதுரை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் மேற்கண்ட மதுரம் என்பவரை அதிகாரம் இல்லாத பதவியில் அமர்த்த குறிப்பிட்டுள்ளது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை முழுவதும் மீறி மதுரம் என்பவர் ஈரோடு மாநகராட்சி நகர் பொறியாளராக ஏற்கனவே பார்த்து வந்த அதே அதிகாரம் மிக்க பணியில் குறுக்கு வழியில் நியமிக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த நியமனம் அவர் மென்மேலும் ஊழல் செய்ய வழி வகுக்கும்.

எனவே ஆறு வருடங்களாக நிலுவையில் இருக்கும் A.மதுரம் என்பவர் மீதான ஊழல் குற்ற சாட்டுகளை விரைவில் விசாரித்து அவரை பணி நீக்கம் செய்து உரிய தண்டனை பெற்று தரவும், அதுவரை அவரை உயர் நீதிமன்றம் உத்திரவு படி அதிகாரமில்லாத பணியில் நியமிக்க கூறி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக ,லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை இயக்குனர் அவர்கள் நகரமைப்பு நிர்வாக ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க உத்திவிட்டுள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: