• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மசினக்குடி அருகே 4 பேரை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு

மசினக்குடி அருகே 4 பேரை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு

புலி

புலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வாரம் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி புலி, சந்திரன் என்பவரை தாக்கி கொன்றது. இதையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த புலிக்கு T -23 என்று வனத்துறையினர் பெயர் வைத்தனர். டிரோன் கேமரா உதவியுடன் புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், வனத்துறையினர் கண்ணில் சிக்காமல் மசினக்குடிக்கு ஆட்கொல்லி புலி தப்பியது. அங்கு குரும்பர்பாடியைச் சேர்ந்த மங்கள பசுவன் என்பவர் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

    Also Read : சிவாஜி மணிமண்டபத்துக்கு முதல்வர் வந்தபோது டிராபிக் ஜாம் - நீதிபதி அப்செட்

    இதுவரை புலியால் நான்கு உயிர்கள் பறிபோயுள்ள நிலையில், அதனை சுட்டுபிடிக்க கோரி கூடலூர் அதிமுக எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன் தலைமையில் மசினகுடி சாலையில் 2 மணிநேரம் சாலை மறியல் நடைபெற்றது. இந்த நிலையில், ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: