முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொதுத் தேர்வின் போது தடையற்ற மின்சாரம் - மின்வாரியம் உத்தரவு

பொதுத் தேர்வின் போது தடையற்ற மின்சாரம் - மின்வாரியம் உத்தரவு

பள்ளி தேர்வு - மாதிரிப்படம்

பள்ளி தேர்வு - மாதிரிப்படம்

TNEB : பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வின் போது தடையற்ற மின்சாரம் வழங்கவேண்டும் என அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற 10ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வுகள் மே 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மே 5 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், மின்சார வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும் என்றும், பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : கள்ளச்சந்தையில் மது விற்பனை.. தடுக்கக் கோரிய மாணவர்களுக்கு போலீஸ் என கூறி மிரட்டல்

மேலும், பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்றவும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: 10th Exam, 12th exam, Public exams, TNEB