Home /News /tamil-nadu /

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.182 கோடியை உடனடியாக வழங்க உத்தரவு: அமைச்சர் பன்னீர்செல்வம்

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை 182 கோடி உடனடியாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வேளாண்மைத்துறை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு இன்று பதிலளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், முதன் முறையாக தமிழக அரசு தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையை யாருமே குறை சொல்லவில்லை. எதிர்க்கட்சிகள் கூட இதை பாராட்டியுள்ளனர்.

மாவு பூச்சி நோயால் 10 மாவட்டங்களில் 8491 ஹெக்டேர் மரவள்ளி கிழங்கு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஹெக்டர் ஒன்றுக்கு 2000 ரூபாய் நிவாரண தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முப்பத்தி நான்கு மாவட்டங்களில் இதுவரை 107 கோடி ரூபாய் வரை பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் நாகை உள்ளிட்ட 4 மாவட்ட விவசாயிகளுக்கு இன்னும் 10 நாட்களில் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

Also read: ஊரடங்கு குறித்து அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

இந்த ஆண்டு குருவை சாகுபடி பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய  அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 10 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள்  கரும்பு விவசாயிகளுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகையை வழங்காமல் உள்ளது.

இதனால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சர்க்கரை ஆலைகளுக்கு  182 கோடியே 13 லட்சம் ரூபாய் வழங்க அரசாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த ஆண்டு குருவை சாகுபடி பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய  அவகாசம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

10 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகையை வழங்காமல் உள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சர்க்கரை ஆலைகளுக்கு 182 கோடியே 13 லட்சம் ரூபாய் வழங்க அரசாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Farmers

அடுத்த செய்தி