பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

பவானிசாகர் அணை

கீழ்பவானி வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு.

  • Share this:
    கோயம்புத்தூர் மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் இரட்டைபடை மதகுகள் பாசன பகுதியில் உள்ள 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், நாளை (ஜனவரி 7 ஆம் தேதி) முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இடைவெளிவிட்டு 12 டிஎம்சி க்கு மிகாமல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில் உள்ள 15743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நாளை 7ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 2.5 டிஎம்சிக்கு மிகாமல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published: