• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Devendrakula Velalar: தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் ஜாதிச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவு

Devendrakula Velalar: தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் ஜாதிச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவு

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் ஆகிய ஆறு ஜாதிப் பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் எனும் பெயரில் ஜாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் ஆகிய ஜாதிகளை சேர்ந்தவர்களை, தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைக்க வேண்டுமென, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.

    இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, கடந்த ஆண்டு நவம்பரில் அறிக்கை அளித்தது. இந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின், சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சான்றிதழ் வழங்க அதிகாரம் பெற்ற அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்று, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர் கே.மணிவாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த உத்ரவில், “பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் ஆகிய ஜாதிப் பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைக்கலாம் பல்வேறு தரப்பினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதுதொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, சட்டத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 28-ல் அறிக்கை அளித்தது.

    இந்த அறிக்கையானது மத்திய அரசுக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசானது இதனை ஆய்வு செய்து உரிய சட்டத் திருத்தத்தைச் செய்தது. இந்த சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த ஏப்ரல் 13-ல் ஒப்புதல் அளித்தார்.

    Must Read :  கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க தமிழக அரசு திட்டம்

    இதையடுத்து சட்டத் திருத்தமானது அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனால், அது நடைமுறைக்கு வந்தது. இதனை மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சான்றிதழ் வழங்க அதிகாரம் பெற்ற அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்” இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: