• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரக உள்ளாட்சித் தேர்தல் : பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவு

தமிழக தேர்தல் ஆணையம்

தமிழக தேர்தல் ஆணையம்

தேர்தலின்போது மொத்தம் 39 ஆயிரத்து 408 காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

  • Share this:
    ஊரக உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு பதற்றமான மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூடுதல் காவலர்களை நியமித்தல், சோதனைச்சாவடிகள் அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    தேர்தலின்போது மொத்தம் 39 ஆயிரத்து 408 காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல் கட்டத்தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் நிலையில், 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில், வெளியிலிருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சி பிரமுகர் வெளியேறிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடி, ஆரியமுத்து மோட்டூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் துரைமுருகன், செந்தில்பாலாஜி, எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

    அப்போது பேசிய துரைமுருகன் அரசுப்பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், பெண்களை நடத்துநர்கள் தரக்குறைவாக நடத்துவதாக புகார் வந்தால், அவர்களை வேலையை விட்டு அனுப்பிவிடுவோம் என்றும் கூறினார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவின் திட்டங்களை விளக்கி வாக்குகளை சேகரித்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோலூரில், நாம் தமிழர் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம்தமிழர் கட்சியில் உள்ளவர்கள் போர்வீரர்கள் என்றும், இது திமுக, அதிமுக கட்சி அல்ல என்றும் பேசினார்.

    Must Read : ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா - அதிர்ச்சியில் பெற்றோர்கள்

    இதேபோல ஆங்காங்கே அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: