முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

கோப்புப் படம்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 • Last Updated :
 • Share this:
  சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலேசானை கூட்டத்திற்கு பின் சென்னை, சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் ஜூன் 19-ம் தேதி முதல் 12 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஊரடங்கு பிறப்பிக்க்பட்டுள்ள பகுதிகளான திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும்
  மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதனிடையே முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வரும் ஜூன் 19-ம் முதல் 30-ம் தேதி வரை மதுப்பான கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: