Home /News /tamil-nadu /

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூட உத்தரவு

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூட உத்தரவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

TASMAC Bar | பொது இடங்களில் மது அருந்த சட்டம் அனுமதிக்காத நிலையில், டாஸ்மாக் கடைகளில் மது அருந்த அனுமதிக்க முடியாது.

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் உடன் இணைந்த அனைத்து பார்களையும் ஆறு மாதங்களில் மூட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதி சரவணன், டாஸ்மாக் மதுபான கடைகளை ஒட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்த தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால், மதுபான கடைகளை ஒட்டிய பார்களை மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், டாஸ்மாக் நிர்வாகம் நேரடிதாகவோ, மறைமுகமாகவோ பார்களை நடத்த இந்த சட்டம் அனுமதிக்கவில்லை என்றும், பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளதாகவும் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    Also Read : நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல்... வேலூரில் பதற்றம்

    டாஸ்மாக் கடைகளுக்கு இடத்தை குத்தகைக்கு வழங்குபவர்கள், அருகில் உள்ள இடத்தை மேம்படுத்தி, தின்பண்டங்கள் விற்கவும், காலி பாட்டில்களை சேகரிக்கவும் உரிமம் பெற்றவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த நடைமுறை சட்டத்தின் அனுமதியை பெற்றதல்ல என்றும் இதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் மது அருந்த சட்டம் அனுமதிக்காத நிலையில், டாஸ்மாக் கடைகளில் மது அருந்த அனுமதிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

    மேலும், பழங்கால இலக்கியங்களில் மது அருந்துவதை ஏற்றுக் கொண்ட பழக்கமாக கூறப்பட்டாலும், திருக்குறளில் கள் உண்ணாமை என்ற தனி அதிகாரமே உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி சரவணன், மகாத்மா காந்தியும் மதுவுக்கு எதிராகவே இருந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

    இப்படி மதுவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் நிலவி வந்ததாக கூறிய நீதிபதி, 1937ம் ஆண்டு தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்பட்ட போதும், முழு மதுவிலக்கு என்பது இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai High court, Tasmac

    அடுத்த செய்தி