Home /News /tamil-nadu /

Exclusive: தமிழைவிட சமஸ்கிருதமே மூத்தது என்ற சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க உத்தரவு!

Exclusive: தமிழைவிட சமஸ்கிருதமே மூத்தது என்ற சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க உத்தரவு!

Breaking News

Breaking News

சர்ச்சைக்குரிய வகையில் வெளியாகியுள்ள இந்தப் பாடப்பிரிவு நீக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
    பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் புதிதாக பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு பாடப்புத்தக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், தேசிய கீதம் தவறாக குறிப்பிடப்பட்டும், பாரதியார் காவி தலைப்பாகை அணிந்திருப்பது போல் படம் இடம்பெற்றும் சர்ச்சைகள் கிளம்பின.

    அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள 12-ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் கி.மு 300 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் என்றும், கி.மு 2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதனையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் வெளியாகியுள்ள இந்தப் பாடப்பிரிவு நீக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, பாடப்புத்தகத்தை தயாரித்த 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க செங்கோட்டையன் உத்தரவிட்டிருந்தார். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    தற்போது, பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் இடம்பெற்றுள்ள தமிழை விட சமஸ்கிருதமே மூத்த மொழி என்ற சர்ச்சைக்குரிய பகுதியை நீக்க மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Sanskrit, Tamil

    அடுத்த செய்தி