ஆவின் சங்கத் தலைவர் ஓ.ராஜாவின் நியமனம் ரத்து - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

ஆவின் சங்கத் தலைவர் ஓ.ராஜாவின் நியமனம் ரத்து - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
ஓ ராஜா
  • Share this:
தேனி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவை நியமித்ததை ரத்துசெய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி 17 உறுப்பினர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை ரத்து செய்யக் கோரியும் அம்மாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், பிற உறுப்பினர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், தற்காலிக உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்தது.


இதை எதிர்த்து ஆவின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ரவீந்தரன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், ஓ.ராஜா உட்பட 17 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டதை ரத்துசெய்வதாக உத்தரவிட்டது. மேலும், கூட்டுறவு சங்கத்திற்கு தற்காலிக உறுப்பினர் குழு அமைக்கலாமா அல்லது தேர்தல் நடத்துவதா என்பதை ஆவின் மேலாண் இயக்குநர் முடிவெடுக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது.
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்