கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்படுகிறதா? துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு..

கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்க சந்தையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்

கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்படுகிறதா? துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு..
கோப்பு படம்
  • Share this:
கொரோனா பரவல் காரணமாக, மக்கள் கூட்டம் மிகுந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு, திருமழிசையில் சந்தை செயல்பட்டு வருகிறது. ஆனால், அங்கு போதிய வசதிகள் இல்லை என்று வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க...ஏறிய வேகத்தில் மளமளவென இறங்கும் தங்கம் விலை - 2022 ஆண்டில் சவரன் ₹ 60 ஆயிரத்தை தொடுமாம்


இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் பார்வையிட்டு, அங்கு செய்யப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கிறார்.ஆய்வுக்கு பின்னர் தலைமைச் செயலகத்தில் வணிகர் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டை திறப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading