துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்க செல்கிறார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8 முதல் நவம்பர் 17 வரை அரசுமுறை பயணமாக அமெரிக்க செல்கிறார். சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நவம்பர் 9-ம் தேதி சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெறும் குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நவம்பர் 13 மற்றும் 14-ல் வாஷிங்டன்னில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார். நவம்பர் 17ம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார். முன்னதாக, கடந்த இரு மாதங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அமெரிக்கா சென்றிருந்தார்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.