ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க செல்கிறார் ஓபிஎஸ்

குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க செல்கிறார் ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பண்னை வீட்டில் கொள்ளை

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பண்னை வீட்டில் கொள்ளை

குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குஜராத் செல்லவுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு உள்ளது. இருவரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை குஜராத் செல்ல இருக்கிறார். குஜராத் செல்லும் ஓ.பன்னீர்செல்வம் நாளை நடைபெறும் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 156 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அம்மாநில முதல்வராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். காந்திநகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், விழாவில் பங்கேற்பதற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம்  குஜராத் செல்கிறார்.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு

ஏற்கனவே ஜி-20 மாநாடு தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ் தரப்பினர் சற்று அதிர்ச்சியடைந்த நிலையில் கூட்டணி கட்சி என்ற முறையில் தற்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அதிமுகவின் இரு அணிகளுக்கிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: OPS