ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக தலையீடு? மோடியை சந்திக்கிறாரா ஓ.பி.எஸ்? - வைத்தியலிங்கம் பரபரப்பு தகவல்!

அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக தலையீடு? மோடியை சந்திக்கிறாரா ஓ.பி.எஸ்? - வைத்தியலிங்கம் பரபரப்பு தகவல்!

வைத்தியலிங்கம், ஓபிஎஸ், பிரதமர் மோடி

வைத்தியலிங்கம், ஓபிஎஸ், பிரதமர் மோடி

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியிடம் கேட்டபோது, வைத்தியலிங்கம் சொன்னது அவர் சொந்த கருத்து எனவும் அதற்கெல்லாம் பதில் கூற இயலாது எனவும் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக தலையிட்டால் தவறில்லை எனவும் விரைவில் ஓ.பன்னீர்செல்வம் பிரமதர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளார் எனவும் ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

  ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக  பல்வேறு அணிகளாக பிரிந்துள்ளது. டிடிவி தினகரன் அமமுக என்ற தனிக்கட்சியை தொடங்கிய நிலையில், தற்போது ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் அதிமுகவுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர்.

  இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த பேட்டியில், அதிமுக கட்சி ஒன்றிணைய வேண்டும் என 90% தொண்டர்கள் மத்தியில் எண்ணம் வந்துவிட்டது எனவும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் இதே எண்ணத்தில் இருப்பதாகவும் பேசியுள்ளார். மேலும் ஓபிஎஸ் விரைவில் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  இதேபோல் பிரச்னை எழுந்த போது பாஜக தலையிட்டு அதிமுகவை இணைத்து வைத்தது எனவும் மீண்டும் அவ்வாறு செய்தால் தவறில்லை எனவும் அவர் கூறினார்.இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியிடம் கேட்டபோது, வைத்தியலிங்கம் சொன்னது அவர் சொந்த கருத்து எனவும் அதற்கெல்லாம் பதில் கூற இயலாது எனவும் தெரிவித்தார்.

  இதையும் வாசிக்க: ஸ்டாலின் மிகவும் நல்லவர் தான்... அவருடன் இருப்பவர்கள்தான் தூண்டி விடுகின்றனர்- ஹெச்.ராஜா

  தொடர்ந்து பேசிய அவர், பாஜக என்பது  கூட்டணியில் இருக்கும் கட்சி மட்டுமே, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முடிவெடுப்போம் எனவும் தெரிவித்தார். மேலும் “உலக தலைவர் மோடியை சின்ன பிரச்னைகளோடு இணைத்து பேசுவது நாகரிகமில்லை” எனவும் கூறினார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: ADMK, OPS - EPS, PM Modi, Vaithiyalingam