Home /News /tamil-nadu /

ஓபிஎஸ்-ன் அடுத்த திட்டம்! அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு

ஓபிஎஸ்-ன் அடுத்த திட்டம்! அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

இபிஎஸ் தன் மேல் உள்ள எல்லா வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவித்து கொள்வதற்காகவே திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இவ்வாறு செயல்பட்டு வருகிறார் என குற்றம்சாட்டினார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரைவில் அதிமுக அலுவலகத்திற்கு செல்ல உள்ளனர் எனவும் அதற்கு காவல்துறையின் பாதுகாப்பு கோரியும் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

    கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கலவரம் நடந்தது. இதனையடுத்து அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பின்னர் அந்த வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக முடிந்தது. அதில் இபிஎஸிடம் சாவியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.

    இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பினரும் அதிமுக அலுவலகம் செல்லவுள்ளதாகவும் அதற்கு பாதுகாப்பு வழங்க கோரியும் ஓபிஎஸ் ஆதரவாளான ஜேசிடி பிரபாகர் சென்னை ராயப்பேட்டை E2 காவல் நிலையத்தில் மனு வழங்கினார்.

    அதன் பின் செய்தியாளர்கள் சந்தித்த ஜேசிடி பிரபாகர் பேசியதாவது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக தெரிவித்தார். ஓபிஎஸ் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனவும் அவர் அலுவலகத்திற்குள் செல்ல எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: தேசிய கொடியை வழங்கி யாத்திரை தொடங்கி வைத்த ஸ்டாலின்... சல்யூட் அடித்து பெற்ற ராகுல் காந்தி

    மேலும் சில சமூக விரோதிகள் தான், ஓபிஎஸ் அலுவலகத்திற்குள் செல்ல தடையாக உள்ளனர் அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார்.

    கட்சியை பலவீனம் படுத்ததும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசி கொண்டு இருக்கிறார். இபிஎஸ் தன் மேல் உள்ள எல்லா வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவித்து கொள்வதற்காகவே திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இவ்வாறு செயல்பட்டு வருகிறார் என குற்றம்சாட்டினார்.

    மேலும் இபிஎஸ் தன்னை ஜெயலலிதா, எம்ஜிஆர்-க்கு இணையாக நினைத்து கொண்டு கனவிலே மிதக்கிறார். அதன் வெளிப்பாடாகவே அவர்களுக்கு இணையாக அலுவலகத்தில் தன் புகைப்படத்தை வைத்துள்ளார் எனவும் கூறினார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: ADMK, Chennai Police, OPS, OPS - EPS

    அடுத்த செய்தி