ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

O Panneerselvam | ''திருந்தி வந்தவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு'' : கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன ஓ.பி.எஸ்.

O Panneerselvam | ''திருந்தி வந்தவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு'' : கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன ஓ.பி.எஸ்.

ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வம்

இயேசு கூறியதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (O. Panneerselvam) குட்டிக் கதையை கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தவறு செய்து திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (O. Panneerselvam) குட்டிக் கதை கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடித்துள்ள சசிகலா (Sasikala), அதிமுகவை கைப்பற்ற சட்டரீதியில் போராடி வருகிறார். முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, 2017-ம் ஆண்டு நடந்த அதிமுக (ADMK) பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் அடிப்படையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோர் அறிவித்து விட்டனர். சிறையில் இருந்து திரும்பி வந்த பின்னர், அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு வெளிப்படை ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

இதையும் படிங்க : அதிமுகவில் சசிகலா? ஓ.பன்னீர்செல்வம் சூசக கருத்து!

 இதற்கிடையே, அஇஅதிமுக பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு அடைமொழியுடன், சசிகலா அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அனைவரும் இணைந்து அடுத்து வரும் தேர்தல்களை சந்திக்க வேண்டும் என்றும், ஒன்றிணைந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் சசிகலா கூறியுள்ளார். மேலும், ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு நேரில் சென்று சசிகலா ஆறுதல் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், தவறு செய்து திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குட்டிக் கதை கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ரஜினியை சந்தித்தது ஏன்? சசிகலா தரப்பில் விளக்கம்

 சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறுகையில், ''நான் நல்லவர்களை காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம் திருந்தச் செய்யவே, நான் வந்திருக்கிறேன்.

நல்லவர்கள் என்றுமே நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது என்று இயேசு கூறினார்.'' என்று பேசினார்.

First published:

Tags: ADMK, Christmas, O Panneerselvam