முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஈபிஎஸ் அணிக்கு தாவிய ஓபிஎஸ் தரப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர்!

ஈபிஎஸ் அணிக்கு தாவிய ஓபிஎஸ் தரப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர்!

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் செந்தில் முருகன்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் செந்தில் முருகன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும் பட்சத்தில் அவர் வாபஸ் பெறப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் செந்தில்முருகன். அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வராத நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் செந்தில் முருகனை தனது வேட்பாளராக அறிவித்தார்.

பாஜக போட்டியிடும் பட்சத்தில் அவர் வாபஸ் பெறப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது வேட்புமனு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த செந்தில்முருகன், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செந்தில்முருகன் செயல்பட்டதாக கூறி, அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Pannerselvam