ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

என் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் ஈபிஎஸ் தடுத்தார்: ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

என் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் ஈபிஎஸ் தடுத்தார்: ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

தங்களது உயிரே போனாலும் அதிமுக சட்டவிதிகளை மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

தங்களது உயிரே போனாலும் அதிமுக சட்டவிதிகளை மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

தங்களது உயிரே போனாலும் அதிமுக சட்டவிதிகளை மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் ஈ.பி.எஸ். தடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள ஓ.பி.எஸ். தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கட்டும் எனவும் சவால் விட்டுள்ளார்.

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கோஷ்டி மோதல் நீடித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒபிஎஸ் நியமித்த  88 மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆசி இங்கு உள்ளவர்களுக்கு உண்டு என்று கூறினார். எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் காட்டமாக பேசினார்.

இதையும் படிங்க: 'பருப்பு வேகாது.. தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குங்கள்'- பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் சவால்!

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பதை நீக்கியவர்களை நாடு மன்னிக்காது என்றார். மனிதாபிமானம் கூட இல்லாமல் ஒருவர் சர்வாதிகார போக்கில் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடினார்.

அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது என்றும் தங்களது உயிரே போனாலும் அதிமுக சட்டவிதிகளை மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குவாரா என்றும் ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்தார்.

First published:

Tags: ADMK, OPS - EPS