Home /News /tamil-nadu /

ஆர்.பி.உதயகுமாருக்கு போனில் மிரட்டல் விடுத்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் கைது

ஆர்.பி.உதயகுமாருக்கு போனில் மிரட்டல் விடுத்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் கைது

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் பற்றி அவ்வப்போது கடுமையாக பேசி வருகிறார். இந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம், அதிமுக-வில் மீண்டும் இணைந்தால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சங்கரன்கோவிலில் இருந்து பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆர்.பி.உதயகுமாரிடம் செல்போனில் பேசிய சரவண பாண்டியன் என்பவர், உயிரிழக்க முடிவுசெய்துவிட்டால், பாடைகட்டி, மாலையோடு வந்தால் தூக்கிச் செல்ல தயாராக இருப்பதாக பேசியுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த, தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகி சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். கலகத்தை ஏற்படுத்துதல் 153, அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தல் 505, ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அய்யாபுரம் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, R.B.Udhayakumar, Tamil News

    அடுத்த செய்தி