கட்சிக்கு மட்டுமே தொண்டர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்: அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு

ஓ.பன்னீர் செல்வம்

2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற ஒரு இலக்கோடு களப்பணி ஆற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அறிவுறுத்தினார்.

 • Share this:
  கட்சிக்கு மட்டுமே நிர்வாகிகள், தொண்டர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டதில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

  தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது . அப்போது கூட்டத்தில் பேசிய அவர், கட்சியின்  உயர் மட்டத்தில் உள்ள பொருப்பாளர்களான எனக்கோ மற்ற யாருக்கோ நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டியதை விடுத்து அனைவரும் ஒன்றாக கட்சிக்கு விசுவாசம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

  மேலும் பேசிய அவர், ”அப்படி விசுவாசமாக உள்ளவர்களை மட்டுமே பொறுப்பாளராக அமர்த்த வேண்டும். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது போல் பல நூறு ஆண்டுகள் அதிமுக தொடர்ந்து இருக்கும் வேண்டும். எனவே கட்சி பொறுப்பில் உள்ள அனைவரின் எண்ணமும் தூய்மையாக இருக்க வேண்டும். நமது அடுத்த இலக்கு 2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற ஒரு இலக்கோடு களப்பணி ஆற்ற வேண்டும்” என்றார்.  இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
  Published by:Yuvaraj V
  First published: