ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், “பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு வந்துள்ளது. தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது. ஓபிஎஸ்ஸுக்கும் எங்களுக்கும் இனி எந்தத் தொடர்பும் கிடையாது. மூத்த நிர்வாகிகளோடு ஆலோசித்து பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.” என கூறினார். மேலும் தான் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களில் பொதுச்செயலாளர் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்” என தெரிவித்தார்.
மேலும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் என் பக்கம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, EPS, OPS, Supreme court