Home /News /tamil-nadu /

புழல் சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த ஓபிஎஸ் : எப்படி இருக்கிறார் என விளக்கம்....

புழல் சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த ஓபிஎஸ் : எப்படி இருக்கிறார் என விளக்கம்....

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

OPS met Jayakumar : புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் சுமார் 35 நிமிட சந்தித்துப் பேசினார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, 38 மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் திரண்ட அதிமுகவினர், ஜெயக்குமார் கைதை கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் சந்தித்துப் பேசினர். சுமார் அரை மணி நேரம் சந்தித்து பேசிய பின், சிறை வளாகத்தில் செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட திமுகவினர் முயன்ற போது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அவர்களை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தார். இதற்காக திமுகவினரை கையும் களவுமாக பிடித்ததால் உண்மைக்கு மாறாக அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் என தெரிவித்தார்.

    தமிழகத்தில் பல்வேறு வகையில் ஆளும் அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது எனவும்,  இதற்காக  தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெறுகிறது எனவும் தெரிவித்த அவர், தேனி மாவட்டத்தில்  11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அவர்களை காவல் துறையினர் திமுகவில் சேர வற்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.

    Read More : ஓட்டு மெஷினில் தில்லுமுல்லு.. எந்த பட்டன் தட்டினாலும் திமுகவுக்கு போகும்படி புரோகிராம் செய்திருக்கிறார்கள்.... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

    அதிமுகவின் 50 ஆண்டு காலத்தில் பல போராட்டங்களையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்து அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும், எந்த வித அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம் எனவும், கள்ள ஓட்டு போட வந்தவர் மீது வழக்கு பதியாமல் அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு அரசு  அச்சுறுத்தல் நடத்தி வருகிறது, அரசியல் ரீதியாக சந்திக்க திமுக அரசுக்க திராணி இல்லை எனவும் கூறினார்.

    Must Read : 15 அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்த வழக்கு... சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

    மேலும், ஜெயக்குமார் நலமாகவும், தெம்பாகவும் உள்ளார் எனவும், எதிர்கட்சியை அழித்து விட திமுக  அரசு கங்கணம் கட்டி செயல்படுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    செய்தியாளர் : கன்னியப்பன்
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Jayakumar, O Panneerselvam, OPS

    அடுத்த செய்தி