ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான்; எடப்பாடி சர்வாதிகாரியாக இருக்கிறார்; அதிமுக முன்னாள் எம்.பி சுந்தரம்

இபிஎஸ்-ஓபிஎஸ்

2021ஆம் ஆண்டு அதிமுக தலைமை தோப்பு வெங்கடாச்சலத்திற்கு எம்எல்ஏ சீட்டு வழங்காமல் நிராகரித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சுயேச்சையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டார்.

  • Share this:
அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டது, ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான், பதவி கிடைத்தால் போதும் என நினைக்கிறார்
எடப்பாடி சர்வாதிகாரியாக இருக்கிறார் என அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். பின்னர் 2016 ஆம் ஆண்டு அவர் எம்எல்ஏ ஆனபோதும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. பின்னர் 2021ஆம் ஆண்டு அதிமுக தலைமை அவருக்கு எம்எல்ஏ சீட்டு வழங்காமல் நிராகரித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டார். இதனை அடுத்து அதிமுக அவரை கட்சியிலிருந்து நீக்கியது தேர்தலிலும் அவர் தோல்வியை தழுவினர்.

இந்த நிலையில் இன்று சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார். ஈரோடு மாவட்டத்தை திமுகவின் எஃகு கோட்டையாக மாற்றுவேன் என சூளுரைத்தார்.

Also read: தின்பண்டம் என நினைத்து கிளீனிங் பவுடர் தின்ற 5 வயது சிறுமி; அடையாளம் தெரியாத வகையில் உடல் மெலிந்த சோகம்!

தொடர்ந்து திமுகவில் இணைந்துள்ள அதிமுகவின் முன்னாள் எம்பி பி.ஆர்.சுந்தரம் பேசியபோது, அதிமுக ஒரு ஜாதி கட்சியாக மாறிவிட்டது. ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான், பதவி கிடைத்தால் போதும் என நினைக்கிறார். எடப்பாடி சர்வாதிகாரியாக இருக்கிறார்.  வேலுமணி, தங்கமணி என கட்சியை ஆட்டி படைக்கின்றனர். கடமை கண்ணியம் கட்டுபாடு அதிமுகவில் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இதேநாளில், தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட பல மாற்று கட்சியிலிருந்து 125 நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
Published by:Esakki Raja
First published: