Home /News /tamil-nadu /

தேனியில் ஓபிஎஸ்.. சேலத்தில் இபிஎஸ்.. ஆலோசனை கூட்டங்களால் பரபரக்கும் அதிமுக.. அடுத்தது என்ன?

தேனியில் ஓபிஎஸ்.. சேலத்தில் இபிஎஸ்.. ஆலோசனை கூட்டங்களால் பரபரக்கும் அதிமுக.. அடுத்தது என்ன?

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை மீண்டும் வலுபெறத் தொடங்கிய நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, அதிமுக.,வில் சசிகலா மற்றும் தினகரனை இணைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓபிஎஸ்ஸிடம் வழங்கப்பட்டது.

    அதிமுகவில் சரியான தலைமையில்லாததால் தொண்டர்கள் தொய்வுற்றுள்ளதாகவும், சசிகலா, டிடிவி தினகரன் தலைமையேற்று அதிமுகவை வழிநடத்த வேண்டுமென்றும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

    கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருப்பதாக அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரனும் கூறியுள்ளார்.

    ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் முடிவு செய்யட்டும்: அதன்பிறகு பதில்சொல்கிறேன்- டி.டி.வி.தினகரன் விளக்கம்

    இந்நிலையில், சென்னையில் அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம், தேனி மாவட்ட நிர்வாகிகளின் கருத்தை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றார்.

    சசிகலாவை சேர்க்கலமா? வேண்டாமா? என்பதை முடிவெடுக்க வேண்டியது அதிமுக பொதுக்குழு தான் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலக வலியுறுத்தி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வெற்றிவேல் என்பவர் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், புதுச்சேரியில் கட்சி அடியோடு காணாமல் போய்விட்டதாகவும், தற்போது தமிழகத்தில் அதிமுகவை காலி செய்ய சதி நடப்பதாகவும் அச்சிடப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள் :  52 வயதில் மறுமணம் செய்து கொண்ட தாய்... முழு மனநிறைவுடன் மகன் பகிர்ந்த புகைப்படம்!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில், தேனி மாவட்டம் கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.

    இதேபோன்று, சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் சுமார் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, எடப்பாடி பழனிசாமியை, பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், சந்தித்து பேசினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: ADMK, OPS - EPS

    அடுத்த செய்தி