முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்... போராட்டம்.. கலவரம்.. போர்க்களமான அதிமுக தலைமையகம்..

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்... போராட்டம்.. கலவரம்.. போர்க்களமான அதிமுக தலைமையகம்..

அதிமுக அலுவலகத்தில் மோதல்

அதிமுக அலுவலகத்தில் மோதல்

ADMK office Crisis : கல்வீச்சு, மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக அலுவலகம் அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுக்கொண்டு கற்களை வீசி தாக்குதல். இதில் கார் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

அங்கே இரு தரப்பினரும் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செலம் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்த நிலையில், ஓபிஸ் தலைமை அலுவலத்தில் நுழைந்துள்ளார்.

Must Read : ஊழல் புகார்... இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கல்வீச்சு, மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்துள்ளனர். அந்த பகுதி போர்களம் போல காட்சியளிக்கிறது.

வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் படங்கள் கிழித்து, தீவைத்து எரிக்கப்பட்டது.

இதனிடையே அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

First published:

Tags: ADMK, EPS, O Panneerselvam, OPS