ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பரபரப்புகளுக்கு மத்தியில் குஜராத் சென்ற ஓபிஎஸ்... காரணம் இதுதான்..!

பரபரப்புகளுக்கு மத்தியில் குஜராத் சென்ற ஓபிஎஸ்... காரணம் இதுதான்..!

பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம்

ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குஜராத் புறப்பட்டுச் சென்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்தான் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா விட்டுக்கொடுத்தது.

இதனிடையே இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு போட்டியாக அதிமுக சார்பில் வேட்பாளர் களமிறக்கப்பட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். தொடர்ந்து இடைத்தேர்தலுக்காக பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், ரமேஷ் ஆகியோருடன் திடீரென விமானம் மூலம் குஜராத் புறப்பட்டுச் சென்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அகமதாபாத்தில் தமிழ் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள குஜராத் செல்வதாக தெரிவித்தார். இந்த பயணம் அரசியல் காரணங்களுக்காக அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

First published:

Tags: Gujarat, O Panneerselvam