• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்!

11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

2016 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்து. மீண்டும் தமிழகத்தின் நிதித்துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றார். பின்னர் 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவர் நடத்திய தர்மயுத்தம் காரணமாக 2017 ஆம் ஆண்டு மட்டும் அவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

  • Share this:
2தமிழக துணை முதலமைச்சரும் நிதித்துறை அமைச்சராகவும் உள்ள ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைக்கப்பட்ட 15 வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சட்டப்பேரவை பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், 2021-22 நிதியாண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அதன்படி, இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

தேர்தலை ஒட்டி தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் என்பதால், புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பெற்ற ரூபாய் 12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றுமுதல்வர் பழனிசாமி ஏற்கெனவேஅறிவித்துள்ளார். இதற்கான தொகை கூட்டுறவு வங்கிகளுக்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதுபோல விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட முதல்வரின் பல்வேறு அறிவிப்புகளுக்கும் நிதி ஒதுக்கப்படும். இவைதவிர, ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சி அமைத்தவுடன் தமிழகத்தின் நிதித்துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார் அதன் பின்பு 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 6 முறை தமிழக நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்து. மீண்டும் தமிழகத்தின் நிதித்துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றார்.

பின்னர் 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவர் நடத்திய தர்மயுத்தம் காரணமாக 2017 ஆம் ஆண்டு மட்டும் அவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை, அவருக்கு பதிலாக தற்போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயகுமார் வசம் நிதித்துறை வழங்கப்பட்டது. எனவே அமைச்சர் ஜெயகுமார்  தாக்கல் செய்தார். அதன் பின் கட்சியில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 10 முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை 11வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் நிதித்துறை அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் 9 முறை முழு நிதிநிலை அறிக்கையும் 2 முறை இடைக்கால நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்துள்ளார். இதுவரை தமிழகத்தில் அதிகமுறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தவர் என்ற  சாதனையையும் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: