Home /News /tamil-nadu /

நியூஸ் 18 செய்தி எதிரொலி: பழங்குடி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய துணை முதல்வர்!

நியூஸ் 18 செய்தி எதிரொலி: பழங்குடி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய துணை முதல்வர்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மலை வாழ் மக்களுக்கு கருணை தொகை ரூ. 12 ,000 மற்றும் நிவாரணப் பொருட்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

  • News18
  • Last Updated :
நியூஸ் 18 செய்தி எதிரொலி பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் கருணை தொகையை துணை முதல்வர் வழங்கினார்.

மஞ்சளாறு அணை அருகே பழங்குடி மக்கள் வீடுகள் இழந்து தற்காலிக குடியிருப்பில் வசித்து வருவது குறித்து கடந்த வாரம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் வாழும் ராசிமலை கிராமத்தில் உள்ள 35 மலை வாழ் மக்களுக்கு, ரூ.3.5 கோடி மதிப்பிலான புதிய குடியிருப்புகள் கட்டப்படும் வரை, தற்காலிகமாக குடியிருப்பதற்கு வாரியத்தால் வழங்கப்படும் கருணை தொகை ரூ.12 ,000 மற்றும் நிவாரணப் பொருட்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

மேலும் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டும் இடத்தையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Also watch: அதிமுகவின் தோல்விக்கு காரணம் இதுதான் – சி.வி.சண்முகம் புது விளக்கம்

Published by:Anand Kumar
First published:

Tags: ADMK, O Panneerselvam, OPS

அடுத்த செய்தி