அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை என்றும், ஒற்றைத் தலைமைக்கு வர கே.பி.முனுசாமி முயற்சி மேற்கொண்டதாகவும் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆடியோ விவகாரம் அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதுதன்னுடைய குரலே இல்லை என பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு-க்கு அளித்த நேர்காணலில், “ இந்த ஆடியோவை ரிலீஸ் செய்தவர்களைதான் கேட்கவேண்டும். நான் அப்படி பேசவில்லை. உயர்தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி மிமிக்ரி செய்துள்ளார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை பசுமைவழி சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஒபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, அதிமுகவில் மிக மூத்தவர் பொன்னையன். பல உண்மைகளை வெளியில் பேசியிருக்கிறார். தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, தளவாய் சுந்தரம் ஆகிய சிலர் பற்றியே பொன்னையன் பேசியுள்ளார். தனக்கு வரக்கூடிய மிரட்டல்களால் மாற்றிப்பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பொன்னையன்.
பொன்னையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை. அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பொன்னையன் மேல் எடப்பாடி பழனிசாமி அணியினர் கோபமாக இருக்கின்றனர். அண்ணா நகர் K4 காவல் நிலைய காவலர்கள் உடனடியாக பொன்னையன் வீட்டுக்கு உரிய பாதுகாப்பை தர வேண்டும்’ என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய புகழேந்தி, எம்.பி., சீட்டுக்காக கேக் ஊட்டியவர் கோகுல இந்திரா. ஜெயலலிதாவால் தூரமாக தூக்கி எறியப்பட்ட பச்சைத் துரோகி தான் கே.பி.முனுசாமி. அவரை பற்றி பொன்னையன் விரிவாக பேசிவிட்டார். 22 எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்று எடப்பாடி பழனிசாமியை மிரட்டி தான் ராஜ்யசபா எம்.பி., பதவியை பெற்றார் சி.வி.சண்முகம்.
இதையும் படிங்க: சர்ச்சை ஆடியோ.. மிமிக்ரி என மறுக்கும் பொன்னையன்.. அடித்து சொல்லும் நிர்வாகி - ஆட்டம் காட்டும் ஆடியோ விவகாரம்
சாதி வெறி அதிமுகவை ஆட்டிப்படைக்கிறது. கே.பி.முனுசாமி ஓரு பச்சோந்தி, ஓ.பி.எஸ்.சின் தர்மயுத்தம் இல்லையென்றால் கே.பி.முனுசாமி காணாமல் போயிருப்பார். வாயில் வந்ததெல்லாம் பேசுவதற்கு பெயர் பொதுக்குழுவா? ஓ.பன்னீர்செல்வம் என்ன துரோகம் செய்துவிட்டார் என்று விளக்க வேண்டும்
ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் பதவியில் வேறு யாரும் அமரக்கூடாது என்று தான் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி உள்ளார், இது நியாயமா?
மேலும் படிக்க: பழைய பழனிசாமி... வெற்று வசனங்கள் எதற்கு? தைரியம் உண்டா? - இபிஎஸ் மீது ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்..
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் சென்ற போது அவருடன் வந்த அனைவருமே கட்சியினர் தான். ஆனால் ஏற்கனவே கட்சி அலுவலகத்தில் ரவுடிகளை குவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி . போலீஸ் இல்லாவிட்டால் அதிமுக அலுவலகத்தில் பல கொலைகள் நடந்திருக்கும். நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டு, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை விட்டுத்தந்து, சொந்தத்தம்பியை கட்சியில் இருந்து நீக்கியதைக் காட்டிலும் ஓ.பி.எஸ்., வேறு என்ன தியாகம் செய்ய வேண்டும்?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK, OPS - EPS, Ponnaiyan, Pugazhendhi