Home /News /tamil-nadu /

“நமது அம்மா” நாளிதழ் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நீக்கம்!

“நமது அம்மா” நாளிதழ் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நீக்கம்!

நேற்று வரை நமது அம்மா நாளிதழின் பதிப்பில் நிறுவனர்கள் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.

நேற்று வரை நமது அம்மா நாளிதழின் பதிப்பில் நிறுவனர்கள் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.

நேற்று வரை நமது அம்மா நாளிதழின் பதிப்பில் நிறுவனர்கள் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.

    அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அடுத்த கட்ட நடவடிக்கையாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளனர்.

    நேற்று வரை நமது அம்மா நாளிதழின் பதிப்பில் நிறுவனர்கள் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. பொதுக்குழுவிற்கு பிறகு வெளியான பதிப்புகளிலும் இந்த நிலையே தொடர்ந்து வந்த நிலையில் இன்று வெளியான நாளிதழில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாமல் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மட்டுமே நிறுவனர் என்ற இடத்தில் தனித்து இடம்பெற்றுள்ளது.



    அந்தவகையில், இன்று வெளியான நாளிதழ் முழுமையும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான கருத்துகளால் நிரப்பட்டுள்ளது. ஈபிஎஸ் தான் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் பேட்டி ஆகியவையே முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்னதாக மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றப்பட்டு வருகிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தால் கடந்த 23ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பெரும் சலசலப்புடன் நடந்து முடிந்தது. கூட்டத்தில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்ததால், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தனர். இதனால், கூட்டத்தின் பாதியிலே ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் எழுந்துச்சென்றார்.

    மேலும், அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, ஒற்றைத் தலைமையை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அந்த கூட்டத்திலே அறிவிக்கப்பட்டது.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: ADMK, Edappadi palanisamy, Namathu amma, O Pannerselvam, OPS - EPS

    அடுத்த செய்தி