Home /News /tamil-nadu /

‘வைகுண்டத்திற்கு சாலை’ : சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-எ.வ.வேலு சுவாரஸ்ய பேச்சு

‘வைகுண்டத்திற்கு சாலை’ : சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-எ.வ.வேலு சுவாரஸ்ய பேச்சு

ஒ.பன்னீர்செல்வம்

ஒ.பன்னீர்செல்வம்

Tamil Nadu Assembly : வைகுண்டத்திற்கு மட்டுமல்ல சிவலோகத்திற்கு செல்வதற்கும் வழி அமைப்பார் அமைச்சர் சேகர்பாபு என பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழக சட்டப்பேரவையில், சேலம் கோழிக்கால்நத்தம் - வடுகப்பட்டி - வைகுந்தம் சாலை விரிவாக்கம் செய்வது தொடர்பாக எழுப்பட்ட கேள்வியின்போது சுவாரஷ்யமும் சிரிப்பலையும் எழுந்தது.

    வைகுண்டத்திற்கு சாலை அமைக்க கிருஷ்ண பரமாத்மாவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஒ.பன்னீர்செல்வம் தமிழக சட்டமன்றத்தில் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு, திமுக ஆட்சியில் ஆன்மீக அன்பர்கள் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய வகையில் அறவழியில் ஆன்மீகப் பணிகளை இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருக்கக் கூடிய சேகர்பாபு செய்து கொண்டிருக்கிறார்.

    எங்களது ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர் பாபு ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கே வைகுந்தத்திற்கு சாலை அமைத்து சிறப்பாக செயல்படுகிறார்.

    Must Read : ஊரடங்கில் போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி - தமிழக அரசு

    ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ள ஓபிஎஸ் வைகுந்தத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதா என கேட்கிறார். அமைச்சர் சேகர் பாபு வைகுண்டம் மட்டுமல்ல சிவலோகத்திற்கு போவதற்கான அனைத்து பணிகளையும் ஆன்மீக வழியில் மேற்கொண்டு வருவதாக நகைச்சுவையாக பதில் அளித்தார். இதன் காரணமாக பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
    Published by:Suresh V
    First published:

    Tags: O Panneerselvam, OPS, TN Assembly

    அடுத்த செய்தி