ADMK : ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஒத்திவைப்பு!

ஓபிஎஸ்- இபிஎஸ்

சுமார் 4 மணி நேரமாக நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்யப்படாமல் நிறைவடைந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

  • Share this:
 சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 66 இடங்களில் (புரட்சி பாரதம் - ஜெகன்மூர்த்தி அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்றார்) வெற்றி பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக 10 இடங்களில் வெற்றி பெற்றன. இந்நிலையில் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே அதிமுக சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. கட்சிக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

இதன் காரணமாக மாலை 5 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் 4 மணி நேரமாக முடிவு எட்டப்படாமல் நீண்டது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நிறைவு:

இதனிடையே சுமார் 4 மணி நேரமாக நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்யப்படாமல் நிறைவடைந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்காக மீண்டும் வரும் திங்கட்கிழமையன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட வாக்குவதாத்தால் இக்கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவர் தேர்வு செய்யப்படாமல் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே அதிமுக சட்டமன்ற குழு தலைவர் தேர்வு வரும் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மீண்டும் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
Published by:Arun
First published: