ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் : ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை

ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் : ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை

இபிஎஸ்-ஓபிஎஸ்

இபிஎஸ்-ஓபிஎஸ்

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அதிமுக பணியாற்றும், நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மறு பக்கம் எதிர்க்கட்சி என்று குறிப்பிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக கூறியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக வரும் 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், பெரும்பான்மை இழந்ததால் முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்தை ஏற்ற மு.க.ஸ்டாலின், “மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!” என்று எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அதில் “நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அதிமுக பணியாற்றும்.

    Must Read : 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவி ஏற்பு

    10 ஆண்டுகள் அதிமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.

    Published by:Suresh V
    First published:

    Tags: MK Stalin, OPS - EPS, TN Assembly Election 2021