நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்...மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை

இபிஎஸ்-ஓபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது.

 • Share this:
  உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல் நடைபெறுகிறது.

  தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திற்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கும் முனைப்புடன் தேர்தல் ஆணையம் பணியை தொடங்கியுள்ளது.

  Also Read : சென்னை, கோவையில் 200ஐ தாண்டிய தினசரி கொரோனா

  இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர்.

  அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. முதற்கட்டமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

  Also Read : மீண்டும் உயரும் தமிழகத்தின் வருவாய்- ஒரே மாதத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் ஈட்டிய பத்திரப்பதிவுத்துறை

  அதனை தொடர்ந்து வரும் 8 ஆம் தேதி வரை ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்த, அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: