செப்.19-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

செப்.19-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்
  • News18
  • Last Updated: September 15, 2018, 7:39 AM IST
  • Share this:
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இரண்டாவது நாளாக நேற்றும் அதிமுகவின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, `எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக’ கூறினார். மேலும், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.


அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நியமன அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவின் அமைப்புச் செயலர்களாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் சட்ட ஆலோசகராக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எஸ்.பாண்டியனும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 
First published: September 15, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading