உச்சநீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவில் தூக்கம் வரவில்லை - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத்திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டார். ஆர்.பி.உதயகுமார் மகள் உள்ளிட்ட 51 ஜோடிகளுக்கு ஈபிஎஸ் தலைமையில் திருமணம் நடந்தது. இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மனதிலே ஒரு அச்சம் ஏற்பட்டது.இரவு எனக்கு தூக்கம் வரவில்லை.உதட்டில் சிரிப்பு இருந்து உள்ளதில் இல்லை.இங்குள்ள அம்மா கோயிலில் பிரார்த்தனை செய்தேன். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சிலைகளை வணங்கினேன்.திருமண நாளில், தீர்ப்பும் சாதகமாகவும் வர வேண்டும் என வேண்டிக் கொண்டேன்” என்றார்.
”இந்த அம்மா கோயில் தெய்வ பக்தியுடன் இருக்கிறது.இரு தலைவர்களும் அருள் கொடுத்தார்கள்.சக்தி மிக்க தெய்வ தலைவர்கள் கொடுத்த வர பிரசாதம் தீர்ப்பு.1.5 கோடி தொண்டர்களை காக்கும் தீர்ப்பு இன்று வந்துள்ளது. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் திமுகவை கடைசி வரை எதிர்த்து வெற்றி கண்டார்கள்.சில எட்டப்பர்கள் அதிமுகவை உடைக்க நினைத்தவர்கள் முக திரை இன்று கிழிக்கப்பட்டு உள்ளது. திமுக வின் பி டீமாக செயல்பட்டவர்கள் முக திரை கிழிந்து உள்ளது. இனிமேல் அதிமுக தொண்டர்கள் தலைமையில் தான் இயங்கும்.அதிமுக ஒன்றாக இருக்கிறது என சொல்லுங்கள்” என்றார்.
ஈபிஎஸ்தான் இனி நிரந்தர முதலமைச்சர் - செல்லூர் ராஜூ
அதிமுகவை கட்டிக்காக்க கூடிய வல்லமை மிக்க தலைவர் எடப்பாடி தான் என நீதிமன்ற தீர்ப்பு சொல்லுகிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும். எடப்பாடி தான் இனி நிரந்தர முதலமைச்சர். அதற்கான அச்சாணியாக ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் அமையும். - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ