Home /News /tamil-nadu /

அதிமுக தொண்டர்கள் வீட்டுக்கு பைக்கில் சென்று ஓபிஎஸ் கொடுத்த சர்ப்ரைஸ்

அதிமுக தொண்டர்கள் வீட்டுக்கு பைக்கில் சென்று ஓபிஎஸ் கொடுத்த சர்ப்ரைஸ்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம் போடியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பைக்கில் செல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

    தேனி மாவட்டம் போடியில் இரு சக்கர வாகனத்தில் பயணித்து தொண்டர்களின் இல்லங்களுக்கு நேரில்  சென்று வாழ்த்து ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

    தேனி மாவட்டம் போடி 20வது வார்டு செயலாளர் வீரக்குமார்,
    26 வார்டு செயலாளர் குமரேசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளின் இல்ல விழாக்கள் சமீபத்தில் நடைபெற்றது. ஆனால் தனது மனைவி விஜயலட்சுமி இறப்பைத் தொடர்ந்து ஓபிஎஸ் கடந்த 60 நாட்களாக சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஓபிஎஸ்
    வாழ்த்து தெரிவித்தார். இதற்காக தனது காரை பயன்படுத்தாமல் தொண்டர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ஆரவாரமின்றி தனியாக குறுகிய தெருக்களில் பயணம் செய்தார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரவி வருகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: ADMK, Diwali, OPS

    அடுத்த செய்தி