முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காசி கங்கை நதியில் தாயின் அஸ்தியை கரைத்தார் ஓ.பன்னீர்செல்வம்!

காசி கங்கை நதியில் தாயின் அஸ்தியை கரைத்தார் ஓ.பன்னீர்செல்வம்!

காசி கங்கை நதியில் தாயின் அஸ்தியை கரைத்தார் ஓபிஎஸ்

காசி கங்கை நதியில் தாயின் அஸ்தியை கரைத்தார் ஓபிஎஸ்

OPS : காசி கங்கை நதியில் தனது தாயின் அஸ்தியை ஓ.பன்னீர்செல்வம் கரைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள்(95) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹார தெருவில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பழனியம்மாள் உடலுக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர். மாலையில் ஓபிஎஸ் தாயாரின் உடல் தகனம் செய்வதற்காக பெரியகுளம் நகராட்சி மயானத்திற்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் டிராக்டர் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது.‌

இதனைத்தொடர்ந்து பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தனது தாயாரின் சிதைக்கு ஓ.பன்னீர்செல்வம் தீ மூட்டினார். இந்நிலையில், தனது தாயின் அஸ்தியை புனித நதியில் கரைக்க ஓபிஎஸ் முடிவு செய்தார். அதன்படி இன்று காசிக்கு புறப்பட்டு சென்றார். இதனைத்தொடர்ந்து காசி கங்கை நதியில் தனது தாயாரின் அஸ்தியை ஓபிஎஸ் கரைத்தார். அப்போது, அவருடன் நெருங்கியவர்கள் இருந்ததாக தெரிகிறது.

First published:

Tags: ADMK, OPS, Tamilnadu